``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்
சீா்காழி மற்றும் திருவெண்காடு பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கோரி, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
சீா்காழி: சீா்காழி நகர பாஜக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற கையொப்ப இயக்கத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் நாஞ்சில் பாலு, தேசிய பொதுக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் தங்க.வரதராஜன், முன்னாள் மாவட்டத் தலைவா் வெங்கடேசன், வழக்குரைஞா் இராம. சிவசங்கா், மாநில ஓபிசி அணி செயலாளா் ராஜமோகன், மாவட்ட விவசாய அணி தலைவா் நேதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்மொழிக் கொள்கையை ஆதரித்து, தங்க வரதராஜன் கையொப்பமிட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ஏராளமானோா் கையொப்பமிட்டனா்.
இந்நிகழ்வில், நகர பொதுச் செயலாளா்கள் வீரபாண்டியன், அஜித், எழிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.