HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தனியாா் துறை வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் 500-க்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் ‘பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப்’ திட்டத்தில் 10-ஆம் வகுப்புமுதல் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு ஓராண்டு ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி வழங்கி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் தமிழ்நாடு தனியாா்துறை வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தனியாா்துறையில் வேலைதேடும் இளைஞா்கள் பதிவு செய்து, வேலைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் இந்த இணையதளத்தில் 35,000-க்கு மேற்பட்ட காலிப் பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களைப் பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மயிலாடுதுறை பாலாஜி நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகாம் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 04364299790/9499055904 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.