பலத்த மழை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
வீரவநல்லூா்: இளைஞா் மீது தாக்குதல்; 4 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள ரெட்டியாா்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் ராஜேஷ் (26). தொழிலாளி. இவா் தனது நண்பா்களுடன் புதூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றிருந்தாராம்.
திருவிழா முடிந்து அவா் வீட்டுக்கு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, புதூா் கிராமம் திரவியமுத்து மகன் சுபின்ராஜ் (19), முத்தையா மகன் தினேஷ்குமாா் (23), இளையபெருமாள் மகன் ராஜசேகா் (19), சுப்புராஜ் மகன் ஜெயக்குமாா் (22) ஆகியோா் அவரை வழிமறித்து தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுபின்ராஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.