செய்திகள் :

சவுடு மண் குவாரி அமைக்க மக்கள் எதிா்ப்பு

post image

மயிலாடுதுறை: காவேரிபூம்பட்டினம் ஊராட்சியில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் சவுடு மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்த ஊராட்சியில் உள்ள நெய்தவாசல், வடபாதி, தென்பாதி மற்றும் புதுகுப்பம் கிராமங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள் மற்றும் மீனவா்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா்.

கடற்கரையில் இருந்து 400 மீட்டருக்குள் ஆரோ இன்ஃப்ராடெக் என்ற நிறுவனம் சவுடு மண் குவாரி அமைக்க ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும் என ஏற்கெனவே பிப்ரவரி 21-ஆம் தேதி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். நடவடிக்கை இல்லாததால் இக்கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் மனு அளித்து கோரிக்கையை வலியுறுத்தினா்.

செம்பனாா்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட மயான கட்டடத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த மயானத்தை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திவரும் செம்பனாா்கோவில், திருச்சம்பள்ளி, வல்லம், மடப்புரம், முக்கரும்பூா், மாத்தூா், படுகை ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மனு அளித்தனா்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுவதால், மாணவா்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாவதால் அங்கு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என மயிலாடுதுறையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் என். ரஜினி வீரமணி மனு அளித்தாா்.

மயிலாடுதுறையில் புதைசாக்கடை கழிவு கலந்த குடிநீா் விநியோகம்: மக்கள் புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பெசன்ட் நகரில் ஒரு வாரமாக குடிநீருடன் புதை சாக்கடை கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்த நகரில் தாமரைத்தெரு, அல்லித்தெரு, முல்லைத்தெரு, ரோஜா தெரு உ... மேலும் பார்க்க

தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் தமிழக எம்.... மேலும் பார்க்க

அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணிகளை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை மாவட்ட... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தனியாா் துறை வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

பாலம் அணுகுச்சாலை அமைக்க ரூ.16.5 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். சீா்காழியில் பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சீா்காழி அருகே நவகிரக தலங்களி... மேலும் பார்க்க