இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வள...
Helmet Hygiene: ஹெல்மெட்டை தலைமுடிக்கு ஃப்ரெண்டாக்க 5 டிப்ஸ்!
இன்று இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஓன்று, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் கேசப் பிரச்னை. வேர்ப்பகுதியில் ஏற்படும் பாதிப்பில் ஆரம்பித்து, கேச உதிர்வு, வறண்ட கேசம் என இதனால் ஏற்படும் பிரச்னைகள் நீள்கின்றன. ``உயிர் காக்கும் ஹெல்மெட் அணிவது மஸ்ட். இன்னொரு பக்கம், ஹெல்மெட் ஏற்படுத்தும் சேதங்களில் இருந்து கேசத்தையும் பாதுகாக்கலாம்'' எனக் கூறும் அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா, அதற்கான டிப்ஸ்களை கூறுகிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-25/ejh34veq/149282_thumb.jpg)
1. ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் கேச பிரச்னையைத் தவிர்க்க முதலில் கவனிக்க வேண்டியது, ஹெல்மெட் பராமரிப்புதான். ஹெல்மெட்டை வண்டியின் அடியில் வைப்பது, மேசையின் மீது வைப்பது, கப்போர்டில் வைப்பது எனக் காற்றோட்டம் இல்லாமல் வைக்காமல் அதைத் திறந்தவெளியில், வெளிச்சம், காற்று படும் வகையில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அதில் கிருமி சேராமலும், அந்தக் கிருமிகளால் மயிர்க்கால் பகுதியில் அரிப்பு, கேச வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுக்கலாம்.
2. அடுத்ததாக வாரத்துக்கு ஒரு முறையாவது ஹெல்மெட்டை துடைத்து, சானிடைசர் அல்லது டிஸ்இன்ஃபெக்டன்ட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கேசத்தின் வேர்ப்பகுதி தூசு, அழுக்கால் பலவீனமடைவதை தவிர்க்க முடியும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/c7ced0c2-4934-4969-bc19-721486ce3ee1/125663_thumb.jpg)
3. ஹெல்மெட்டை பயன்படுத்தும்போது, கேசத்தில் இருந்து பொடுகு, எண்ணெய்ப்பசை போன்றவை ஹெல்மெட்டில் சேராமல் இருக்க, கேசத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே, ஹெல்மெட்டை மட்டுமே குறை கூறாமல் அதைப் பயன்படுத்துபவரின் கேச சுகாதாரமும் பேணப்பட வேண்டும்.
4. கேசத்தைச் சுத்தமாகப் பராமரிப்பதுடன், கேசத்தில் காட்டன் துணியையோ, ஷாலையோ அணிந்த பின்னர் ஹெல்மெட்டை அணிய வேண்டும். மேலே குறிப்பிட்டதுபோல துணியைப் பயன்படுத்தும்போது ஹெல்மெட்டால் தலையில் உண்டாகும் வியர்வை உறிஞ்சப்படும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/86b512a1-1fd8-4f4e-b89a-64b72a9049b5/132823_thumb.jpg)
5. ஹெல்மெட் பயன்படுத்தும் பெண்கள் ரொம்ப டைட்டாக போனிடெய்ல், பின்னல், கொண்டை போடுவதைத் தவிர்க்க வேண்டும். கேசத்தை முழுவதுமாக ஃபிரீயாக விடுவதும் வேண்டாம். மொத்த கேசத்தையும் ஒன்றாக இணைத்து, தளர்வாக பேண்ட் போட்டுக்கொண்டு, காட்டன் துணியை அணிந்து, ஹெல்மெட் அணிவது நல்லது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY