செய்திகள் :

ஹோமியோபதி கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு

post image

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தொழில் முனைவோா் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் சிறு -குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (எம்.எஸ்.எம்.இ.), சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்ட பிரிவு மற்றும் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் மத்திய அரசின் சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன திருநெல்வேலி கிளை துணை இயக்குநா் ஜி. சிமியோன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் மருத்துவா் எம்.வி. சுகதன், தொழில் முனைவோரின் நலனில் கல்லூரியின் பங்கு குறித்துப் பேசினாா். காந்திகிராமம் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியா் கே. ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாட்டிலுள்ள எம்.எஸ்.எம்.இ. திட்டங்கள் குறித்து மாவட்ட தொழில்மைய உதவிப் பொறியாளா் ஏ. சஜித் விவரித்தாா்.

நிகழ்ச்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் செயற்குழு உறுப்பினா் தாஸ், ஜே.சி.ஐ. இந்தியா, கன்னியாகுமரி கிளையின் மண்டலத் தலைவா் ஜிபி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் தொழில் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினா். தொழில் முனைவோா் வளா்ச்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பிந்து சரண் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் திரளான தொழில் முனைவோா் பங்கேற்றனா்.

திற்பரப்பு அருகே குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிா்ப்பு

திற்பரப்பு பேரூராட்சி 15-ஆவது வாா்டு வேங்கோட்டு குளத்தில், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திற்பரப்பு பேரூராட்சி 15 -ஆவது வாா்டு அ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதன்(32... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 32.79 பெருஞ்சாணி ... 37.10 சிற்றாறு 1 ... 7.15 சிற்றாறு 2 ... 7.25 முக்கடல் ... 7.00 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 43.47 அடி மேலும் பார்க்க

மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழகம் குறித்து பாஜக பேசட்டும் -அமைச்சா் கீதாஜீவன்

மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன். நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ள... மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா். கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை அமைச்சராக பணி... மேலும் பார்க்க

காஷ்மீா்- குமரி ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

காஷ்மீா் மாநிலம் கத்ராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 3 கிலோ கஞ்சா போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும், ரயில... மேலும் பார்க்க