செய்திகள் :

`இனி யாரும் எதிர்த்து கேட்க கூடாது’ - சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை

post image

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்(25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். பேச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஹரிசக்தி(20) கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் முட்டம் வடக்குத்தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள சாராய வியாபாரிகள்

இது குறித்து அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் சாராய விற்பனை செய்வதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மூன்று பேரிடமும் சாராய விற்பை செய்யாதீர்கள் என்றும் சொல்லியுள்ளனர். சாராய விற்பனைக்கு எதிராக அவ்வப்போது, பேசி தட்டிகேட்பவர்களை ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தாக்கி, `உசுரு உடம்புல இருக்காது’னு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்கள். இவர்களது அட்டகாசம் எல்லை மீறிய நிலையிலும் பெரம்பூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முட்டம் பகுதியில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இதில் சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்து விட்டார். தொடர்ந்து, மூன்று பேரும் தெருவில் ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது, சிறுவன் ஒருவன், `ஏன் சாராயம் விற்கிறீர்கள், இதனால் பல பேர் சீரழிகிறார்கள்?’ என கூற அவனை தாக்கியுள்ளனர். இதையடுத்து ஹரிஷ், ஹரிசக்தி இருவரும் சிறுவனை அடித்ததையும், சாராய விற்பனை செய்வதையும் எதிர்த்து கேட்டுள்ளனர்.

கொலை

`எங்களை எதிர்த்து பேசுகிறீர்களா, உங்களுக்கு நடப்பதை பாத்துட்டு இனி யாரும் சாராயம் விற்பதை பத்தி பேசக் கூடாது, போலீஸுக்கும் போக கூடாது’னு ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் நிலை குலைந்த சரிந்து விழுந்த ஹரிஷ், ஹரிசக்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, பெரம்பூர் போலீஸார் சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும், இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட இருவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறையில் பதற்றம் நிலவி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`இரட்டை கொலைக்கு மது விற்பனை காரணமில்லை' - மயிலாடுதுறை போலீஸார் விளக்கம்!

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். சீவிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி சக்தி (20) கல்லூரி ஒன்றில் இன்ஜினீயர... மேலும் பார்க்க

திருநள்ளாறு: சனீஸ்வரர் கோயிலில் போலி இணையத்தளம், பிரசாதம் - கோடிக்கணக்கில் சுருட்டிய குருக்கள் கைது

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்புதுச்சேரி, காரைக்காலில் இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கிலும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்க... மேலும் பார்க்க

நாட்டுவெடிகுண்டு வைத்து வேட்டையாடப்பட்ட கடமான் - கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி காட்டுப் பகுதியில் கடமான் ஒன்று முகம் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை... மேலும் பார்க்க

மயிலாடுதுறை இரட்டைக்கொலை: "சாராய விற்பனையைத் தட்டிக்கேட்டதுதான் காரணமா?" - காவல்துறை சொல்வதென்ன?

சாராய வியாபாரிகளின் அட்டூழியத்தைத் தட்டிக் கேட்டதாக மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்... மேலும் பார்க்க

புதுச்சேரி: 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியரை துவைத்த பெற்றோர்கள்; தனியார் பள்ளி சூறை

புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் பள்ளி . புதுச்சேரி பா.ஜ.க-வின் விவாசாய அணித் தலைவர் ராமுவுக்கு சொந்தமான இந்தப் பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

Kerala: கேஷியரின் கழுத்தில் கத்தி வைத்து பெடரல் வங்கியில் கொள்ளை; கேரளாவை அதிர வைத்த தனி ஒருவன்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பேட்டை பகுதியில் பெடரல் வங்கி கிளை உள்ளது. அங்கு நேற்று மதியம் 2 மணிக்கு பைக்கில் வந்த ஹெல்மட் அணிந்த நபர் வங்கிக்குள் நுழைந்தார். முகத்தை முழுமையாக மூடியி... மேலும் பார்க்க