பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு
தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் ரேவந்த் ரெட்டி ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக தெலங்கானா சட்டப்பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து பிப்ரவரி 4-ம் தேதி விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை தேசிய அளவில் நடத்த வேண்டும் என மத்திய அரசையும் அவர் வலியுறுத்தினார்.
கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!
தெலங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கு நடைபெற்றது. அந்த அறிக்கையின்படி, மாநில மக்கள்தொகையான 3.70 கோடி பேரில் 96.9 சதவீதமான 3,54,77,554 தனிநபா்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் மொத்த மக்கள்தொகையில் அதிகபட்சமாக முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 1,64,09,179 (46.25%) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.