செய்திகள் :

புதுச்சேரி: 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியரை துவைத்த பெற்றோர்கள்; தனியார் பள்ளி சூறை

post image

புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் பள்ளி . புதுச்சேரி பா.ஜ.க-வின் விவாசாய அணித் தலைவர் ராமுவுக்கு சொந்தமான இந்தப் பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சிறுமிக்கு ரத்தப் போக்கு இருந்திருக்கிறது. வலியால் துடித்த அவர் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அழுதிருக்கிறார்.

சாலை மறியல்

அதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் பெற்றோர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்று கூற, அதிர்ந்து போயிருக்கின்றனர் பெற்றோர். அதையடுத்து சிறுமியை விசாரித்தபோது, மணிகண்டன் என்ற ஆசிரியர் தன்னை அடிக்கடி ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று தகாத செயல்களில் ஈடுபடுவார் என்றும், அதுகுறித்து வீட்டில் சொன்னால் அடிப்பேன் என்று அவர் மிரட்டியதால் பெற்றோரிடம் சொல்லவில்லை என்றும் அழுதுகொண்டே கூறியிருக்கிறார் அந்த சிறுமி.

அதையடுத்து சிறுமியை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்ற பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் அதுகுறித்து முறையிட்டிருக்கின்றனர்.  மேலும் பள்ளியின் சி.சி.டி.வி காட்சிகளையும் பார்க்க வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றனர். அப்போது பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக சக பெற்றோர்களும், பொதுமக்களும் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர்.

அடித்து நொறுக்கப்பட்ட பள்ளி

தொடர்ந்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார், ஆசிரியர் மணிகண்டனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். அப்போது அங்கு காத்திருந்த பெற்றோர்களும், பொதுமக்களும் ஆசிரியர் மணிகண்டனை முற்றுகையிட்டு சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த பெண்கள் சூழ்ந்து அவரை செருப்பால் தாக்கினர். நீண்ட நேரத்திற்குப் பிறகே அந்த தாக்குதலில் இருந்து ஆசிரியர் மணிகண்டனை மீட்டு அழைத்துச் சென்றனர் போலீஸார்.

அதையடுத்து பள்ளியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கடலூர் – தவளக்குப்பம் சந்திப்பிற்கு வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சமூக அமைப்பினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் சாலை மறியலில் அமர்ந்ததால், புதுச்சேரி – கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட சமாதானப் பேச்சு தோல்வியடைந்த நிலையில், ஆசிரியர் மணிகண்டனை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

ஆசிரியர் மணிகண்டனை தாக்கும் பெற்றோர்

அந்த ஆசிரியர் மட்டுமல்லாமல், அவரைக் காப்பாற்ற முயற்சிக்கும் பள்ளி நிர்வாகத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த சாலை மறியலால் சுமார் 5 கிலோமீட்டர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. நேரம் செல்லச் செல்ல போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், `முதலமைச்சர், கல்வியமைச்சர், ஆட்சியர் அனைவரும் இங்கு வர வேண்டும்’ என்று பெற்றோர்கள் கோரிக்கை வைக்க, சபாநாயகர் செல்வம் அங்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஆனால் போராட்டக்காரர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து திரும்பிச் சென்றார். அவரையடுத்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, `நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பள்ளியை நிரந்தரமாக மூடுவதுடன், ஆசிரியர் மணிகண்டனுக்கு துணைபோன பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்க, போராட்டக்காரர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதனால் சாலை மறியல் போராட்டம் இரவு 11 மணியை தாண்டியும் நீடித்தது. அதனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன. அதையடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் புகாரைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் கூறியதையடுத்து 7 மணி நேரத்துக்கு பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்த ஆசிரியர் மணிகண்டன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

`இரட்டை கொலைக்கு மது விற்பனை காரணமில்லை' - மயிலாடுதுறை போலீஸார் விளக்கம்!

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். சீவிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி சக்தி (20) கல்லூரி ஒன்றில் இன்ஜினீயர... மேலும் பார்க்க

திருநள்ளாறு: சனீஸ்வரர் கோயிலில் போலி இணையத்தளம், பிரசாதம் - கோடிக்கணக்கில் சுருட்டிய குருக்கள் கைது

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்புதுச்சேரி, காரைக்காலில் இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கிலும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்க... மேலும் பார்க்க

நாட்டுவெடிகுண்டு வைத்து வேட்டையாடப்பட்ட கடமான் - கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி காட்டுப் பகுதியில் கடமான் ஒன்று முகம் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை... மேலும் பார்க்க

மயிலாடுதுறை இரட்டைக்கொலை: "சாராய விற்பனையைத் தட்டிக்கேட்டதுதான் காரணமா?" - காவல்துறை சொல்வதென்ன?

சாராய வியாபாரிகளின் அட்டூழியத்தைத் தட்டிக் கேட்டதாக மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்... மேலும் பார்க்க

`இனி யாரும் எதிர்த்து கேட்க கூடாது’ - சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்(25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். பேச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஹரிசக்தி(20) கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து... மேலும் பார்க்க

Kerala: கேஷியரின் கழுத்தில் கத்தி வைத்து பெடரல் வங்கியில் கொள்ளை; கேரளாவை அதிர வைத்த தனி ஒருவன்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பேட்டை பகுதியில் பெடரல் வங்கி கிளை உள்ளது. அங்கு நேற்று மதியம் 2 மணிக்கு பைக்கில் வந்த ஹெல்மட் அணிந்த நபர் வங்கிக்குள் நுழைந்தார். முகத்தை முழுமையாக மூடியி... மேலும் பார்க்க