பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
'கோபாலபுரம் தாண்டி வெளியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' - அண்ணாமலை
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"அமெரிக்காவில் தற்போது 29 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க அரசு 7,50,000 பேர் விதிகளை மீறி அங்கு தங்கியுள்ளதாக கூறியுள்ளது. இது அமெரிக்க அரசு எடுக்கும் முடிவு. அதற்கு அனைத்து நாடுகளுமே கட்டுப்படுகிறார்கள். ஆனால் இந்திய அரசு, மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்குள் வரக்கூடிய அனைவருக்கும் அரசு உதவி செய்யும் என்று கூறியுள்ளது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கிறது. உலக அளவில் இந்தியாவின் அங்கீகாரம் என்ன, மோடிக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் என்ன என்பதை ஸ்டாலின் பார்க்க வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/00rfivyk/IMG_20250215_WA0051.jpg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-10-21/sw90pwqi/IMG-20241021-WA0014.jpg)
நாடாளுமன்ற தேர்தலில் திமுக 7% வாக்குகளை இழந்திருக்கிறது. 2026 தேர்தலில் 20% வாக்குகளை இழந்து கீழே வந்திருப்பார்கள். அதனால் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் அவரின் பையனுக்கு தான் தேவைப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு டப்பிங் செய்வதற்கு சந்தானம் தேவைப்படுகிறார். முதலமைச்சருக்கு டப்பிங் செய்வதற்கு பல அமைச்சர்கள் அதுவும் அதிமுக-விலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். காரணம் திமுக-வில் சக்தி இல்லை என்பதை முதலமைச்சரே ஒப்புக் கொள்கிறார். தமிழகத்தில் ஒரு உதவாதத்துறை இருக்கிறது என்றால் அது இந்து சமய அறநிலையத்துறை தான். இதைப் பேசினால் அந்த அமைச்சர் ஒரு வேஷ்டியை கட்டிக்கொண்டு வந்துவிடுவார். என்னை முதலமைச்சர் அடக்கி வைத்திருப்பதால் அமைதியாக இருக்கிறேன், என்னை மட்டும் விட்டால் இரண்டில் ஒன்று பார்த்து விடுவேன் என்று கூறுவார். தைரியம் இருந்தால் அதை சிஏஜி ஆடிட்டுக்கு விடுங்கள். தமிழக மக்களுக்கு நாங்கள் அதை படம் போட்டு காட்டுகிறோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-11/2sj4jyqf/2085_14_4_2024_13_57_17_4_DSC_7139.jpg)
தமிழக முதலமைச்சர் அவரின் வேலையை சரியாக செய்யாமல், கும்பமேளாவில், அது நடக்கிறது.. இது நடக்கிறது என குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். சொந்த மாநிலத்தில் நடக்கும் பிரச்னைகளை அவர் ஏன் பேசுவது இல்லை. நான்கு வருடம் தூங்கிவிட்டு தேர்தல் வருகிறது என்பதற்காக, சீனியர் ஆபிஸர் வீட்டில் இருக்கும் பெண் காவலரை தற்போது ஸ்டேஷனுக்கு அனுப்புங்கள் என்று கூறுகிறார். சிறப்பு நீதிமன்றம் என்ன செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை. முதலமைச்சர் பகல் கனவில் இருக்கிறார். அவர் வீட்டில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை தாண்டி வெளியில் இருக்கும் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை." என்றார்.