ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?
NEP: ``தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் நிதி கிடைக்காது" - மத்திய அமைச்சர் ஓப்பன் டாக்
மத்திய அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட காரணங்களால் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு இன்னும் ஏற்காமல் இருக்கிறது. மேலும், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால், கல்விக்கு மத்திய அரசு தரப்பில் ஒதுக்க வேண்டிய பாஜக அரசு ஒதுக்க மறுப்பதாக ஆளும் திமுக அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
வாரணாசியில் இன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திரா பிரதான், ``உலகமே மாறிவரும் சூழலில் மும்மொழி கொள்கையைத் தமிழக அரசு ஏற்க மறுப்பதேன்? உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்கிற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறதா? அரசியல் காரணங்களுக்காகத் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை." என்று கூறினார்.

மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய தர்மேந்திரா பிரதான், ``காசி தமிழ் சங்கமம் மூலம் 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' கலாசார பாரம்ர்யத்தில், புதிய அத்தியாயத்தைச் சேர்க்க பிரதமர் மோடி இலக்கு வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைந்து கல்வித்துறை நடத்துகிறது" என்றார்.