செய்திகள் :

Manipur: ``குடியரசு தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுங்கள்" - மணிப்பூரில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

post image

மணிப்பூரில் 2024 மே மாதத்தில் குக்கி, மெய்தி சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதல், இன்னும் ஓயாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்லை. இவ்வாறிருக்க, கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி கூடிய மணிப்பூர் சட்டமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிப்ரவரி 12-ம் தேதிக்குள் கூட்டியாக வேண்டிய சூழலில், பிப்ரவரி 9-ம் தேதி ஆளும் பாஜக-வைச் சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.

மணிப்பூர் வன்முறை - மோடி - அமித் ஷா

அதற்கடுத்த நாளே, பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் ரத்து செய்தார். இது மக்களைக் காக்கும் முயற்சி அல்ல, பாஜக-வைக் காக்கும் முயற்சி என்று காங்கிரஸ் விமர்சிக்க, பிப்ரவரி 11-ம் தேதி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால், மாநிலத்தின் தலைநகர் உட்பட பல்வேறு இடங்களில் இந்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

மணிப்பூர்

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுமாறு இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மக்கள் கண்டனப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், ``முதல்வரின் ராஜினாமாவையும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதையும் கண்டித்து இந்தப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். மணிப்பூரின் பாதுகாப்பிற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும். குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாகத் திரும்பப் பெற்று, அமைதியை மீட்டெடுக்க ஒரு தலைவரை நியமிக்க வேண்டும்" என்று போராட்டக் குரலாக வலியுறுத்தினர்.

CEC : அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் - பின்னணி? | Vikatan | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* விகடன் இணையதளம் முடக்கம்: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்!* விகடன் இணையதளம் முடக்கம்: ``பாஜகவிற்கு எதிராக பெரு மூச்சு விடுவதையும் கூட...'' - இரா. மு... மேலும் பார்க்க

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது..." - உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க

`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க

'ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்துக்கும் எதிரான தாக்குதல்!' - விகடன் குழும ஆசிரியர் அறிவழகன்

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க