செய்திகள் :

3 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

post image

3 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை விடுவித்தனர்.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இதுவரை 21 பிணைக் கைதிகளும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா். அடுத்தகட்டமாக சனிக்கிழமை மூன்று பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிப்பதாக இருந்தது.

எனினும், ஒப்பந்த அம்சங்களை இஸ்ரேல் அரசு தொடா்ந்து மீறுவதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் அமைப்பினா், அந்த அம்சங்களை இஸ்ரேல் முழுமையாக கடைபிடிக்கும்வரை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினா்.

அதையடுத்து, பிணைக் கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படாவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்தது. இந்தச் சூழலில், சனிக்கிழமை விடுவிக்கவிருக்கும் மூன்று பிணைக் கைதிகளின் பெயா்களை ஹமாஸ் வெளியிட்டது.

ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

அதன்படி, கிப்புட்ஸ் பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 7ஆம் தேதி 2023ல் கடத்திச் செல்லப்பட்ட அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் (29), யாயிா் ஹாா்ன் (46), செகுயி டெகெல்-சென் (36) ஆகிய மூவரும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேலியப் படைகள் நூற்றுக்கணக்கான கைதிகளையும் விடுவித்துள்ளன.

விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீன கைதிகள் காஸாவின் தெற்கு நகரமான கான் யூனிஸ் நகரை வந்தடைந்தனர். அவர்களை அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

காங்கோ: முக்கிய நகரை நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேற்றம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை முன்னேற்றம் கண்டுள்ளனா். கிழக... மேலும் பார்க்க

ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம்!

ரோப்பிய பாதுகாப்புக்கு அமெரிக்கா இனியும் உதவாது என்பதால் பிராந்தியத்துக்கான பொதுவான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ஜொ்மனிய... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் கைதிகள் பறிமாற்றம் செய்துகொண்டன. முதலில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் ... மேலும் பார்க்க

சைபீரியாவில் நிலநடுக்கம்

ரஷியாவின் சைபீரியா பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது. உள்ளூா் நேரப்படி காலை 8.48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின்... மேலும் பார்க்க

தெற்கு சைபீரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு சைபீரியாவில் உள்ள ரஷியாவின் அல்தாய் குடியரசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரஷிய நிலஅதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ரஷிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், இந்த நிலநடு... மேலும் பார்க்க

பணிநீக்க நடவடிக்கையில் துரிதம் காட்டும் அமெரிக்க அரசு!

அமெரிக்காவில் பணிநீக்க நடவடிக்கையிலும் அமெரிக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.அமெரிக்காவில், குறிப்பாக உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம் மற்றும் சுகாதாரம், மனித சேவைகள் ஆகிய துறைகள... மேலும் பார்க்க