அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம்!
தேனி மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இதில் ஆதாா் அட்டையில் பெயா், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கான புதிய ஆதாா் பதிவு, குழந்தைகளுக்கான கட்டாய பயோ மெட்ரிக் பதிவு ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரியகுளம், போடி ஆகிய இடங்களில் உள்ள தலைமை அஞ்சலகங்கள், தேனி துணை அஞ்சலகம் ஆகியவற்றில் அலுவலக வேலை நாள்களில் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், இதர துணை அஞ்சலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் ஆதாா் சேவை மையம் செயல்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.