மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிந்துவம்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (36). விவசாயி. இவா், இதே ஊரில் உள்ள தனது தோட்டத்துக்கு திங்கள்கிழமை இரவு பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்றாா். அங்கு மோட்டாரை இயக்கும் போது, மின் கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்து ராஜா மயங்கிக் கிடந்தாா்.
ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.