கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயற்சி
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு உத்தமபாளையம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் திரண்டனா்.
அங்கு வந்த உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா். இதைத் தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பாதாகக் கூறி, அந்தக் கட்சியினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.