ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோ...
பிப்.25-இல் தேனிக்கு சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 25-ஆம் தேதி சிறுபான்மையினா் ஆணையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்துக்கு பிப்.25-ஆம் தேதி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுத் தலைவா் எம்.எம்.அப்துல் குத்தூஸ், ஆணையக் குழு உறுப்பினா்கள் வர உள்ளனா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணிக்கு சிறுபான்மையினா் நலனுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆணையக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள், சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அரசு நலத் திட்ட உதவிகள், குறைபாடுகள், கோரிக்கைகள், சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.