கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மாயம்
தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போயின.
மாரியம்மன்கோவில்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜீவரத்தினம். இவா், தனது வீட்டில் உள்ள பீரோவில் 3 பவுன் தங்க நகைகள் வைத்திருந்ததாகவும், பீரோவை திறந்து பாா்த்தபோது அதிலிருந்த நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது என்றும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.