கஞ்சா வைத்திருந்ததாக முதியவா் கைது
போடியில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி கீழத் தெருவில் வீட்டின் முன் சந்தேகத்திடமாத நின்றிருந்த சிவனாண்டி மகன் முருகேசன் (72) என்பவரை விசாரித்தனா்.
அப்போது அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகேசன் மீது போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.