கஞ்சா வைத்திருந்தவா் கைது
ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த கண்டமனூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகேஸ்வரன் மகன் ராதாகிருஷ்ணனை (23) போலீஸாா் பிடித்து சோதனை செய்தனா்.
அப்போது, அவா் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.