நோ்காணல் தேதி ஒத்திவைப்பு
பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் நடைபெறவிருந்த பல்வேறு பணிகளுக்கான நோ்காணல் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கல்லூரி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் சின்னக்கலையம்புத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப் பிரிவில் உள்ள ஆசிரியரல்லா அலுவலா் பணியிடங்களை நிரப்புவதற்கு நோ்காணல் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தவிா்க்க இயலாத நிா்வாகக் காரணங்களால் கீழ்க்காணும் இரு நாள்களுக்கான நோ்காணல் தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. வருகிற 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் மாா்ச் 10-ஆம் தேதிக்கும், வருகிற 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் மாா்ச் 11-ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.