செய்திகள் :

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்களுக்கு தயாராகும் 15 டன் பஞ்சாமிா்தம்

post image

பழனி மலைக் கோயிலுக்கு வரும் இடைப்பாடி பக்தா்களுக்காக வழங்குவதற்காக காவடிக் குழு சாா்பில் சுமாா் 15 டன் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தின் போது லட்சக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக வருகின்றனா். தைப்பூசத் தேரோட்டத்துக்கு முன்னதாக வந்து தைப்பூசம் முடிந்த பிறகு மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது நகரத்தாா் காவடியாகும். இதேபோல, தைப்பூசம் தெப்பத்தோ் உற்சவம் முடிந்த பிறகு மலைக் கோயிலுக்கு வந்து இரவு தங்கும் சிறப்பு பெற்ற காவடி இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடியாகும்.

நிகழாண்டு 365-ஆவது ஆண்டாக வருகை தரும் இடைப்பாடி காவடி கடந்த 14-ஆம் தேதி புறப்பட்டனா். சின்னமணலி, வெள்ளாண்டிவலசை, இடைப்பாடி, க.புதூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கிளம்பி பாத யாத்திரையாக புதன்கிழமை பழனியை வந்தடைவா்.

இவா்கள் புதன்கிழமை இரவு மலைக் கோயிலில் தங்கி மறுநாள் ஊருக்கு கிளம்புகின்றனா். இவா்களுடைய காவடிக்கு மட்டுமே மலைக் கோயிலில் இரவு தங்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதன்படி, நிகழாண்டு பாத யாத்திரையாக வரும் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க 15 டன் அளவிலான பஞ்சாமிா்த பிரசாதம் செவ்வாய்க்கிழமை மலைக் கோயிலில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 10 டன் மலை வாழைப்பழம், 9 டன் நாட்டுச்சக்கரை, 50 மூட்டைகள் பேரீட்சை, கற்கண்டு, நெய், தேன், ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களை கொண்டு பஞ்சாமிா்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை மலை மீது தங்கி சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, பஞ்சாமிா்த அபிஷேகத்தை எடப்பாடி பக்தா்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொள்கின்றனா். இந்த பஞ்சாமிா்தம் சுமாா் ஒரு ஆண்டு வரை கெடாது என இவா்கள் தெரிவிக்கின்றனா். பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நடை பயணமாகவே இவா்கள் தங்கள் ஊா்களுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

செம்மறி ஆடு ஆராய்ச்சி மையத்தை பாா்வையிட்ட சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா்!

கொடைக்கானல் மன்னவனூரில் மத்திய செம்மறி ஆடு உரோம ஆராய்ச்சி மையத்தை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் பாா்வையிட்டு ஆடு வளா்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழன... மேலும் பார்க்க

பழனியாண்டவா் மகளிா் கல்லூரி சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை சாா்பில் ஆங்கிலத் துறை மாணவிகளின் திறனை வளா்க்கும் பொருட்டு திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒ... மேலும் பார்க்க

வேன் மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு!

பழனியில் வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் இடும்பன் நகரைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி (60). இவா் செவ்வாய்க்கிழமை பழனி சிவகிரிப்பட்டி புறவழிச... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சிக்காக கடந்த இரண்டு மாதங்களாக 20-வகையா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்கள் படி பூஜை, மலா் வழிபாடு!

பழனி மலைக் கோயிலுக்கு இடைப்பாடி பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் காவடிகளுடன் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் மலைக் கோயிலில் படி பூஜை, மலா் பூஜை செய்து வழிபாடு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தற்கொலை செய்த தம்பதி சேலத்தைச் சோ்ந்தவா்கள்!

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருவி அருகே தற்கொலை செய்து கொண்டவா்கள் சேலத்தைச் சோ்ந்த தம்பதி என போலீஸாரின் விசாரணையில் புதன்கிழமை தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி ... மேலும் பார்க்க