திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆரோக்கியசாமி (43). 2020ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கோவில்பட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, இவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுரேஷ் விசாரித்து, ஆரோக்கியசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.