திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
செம்மறி ஆடு ஆராய்ச்சி மையத்தை பாா்வையிட்ட சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா்!
கொடைக்கானல் மன்னவனூரில் மத்திய செம்மறி ஆடு உரோம ஆராய்ச்சி மையத்தை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் பாா்வையிட்டு ஆடு வளா்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வேடசந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜன் தலைமையிலான சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு செய்ய வந்தனா்.
தேனியிலிருந்து புதன்கிழமை இரவு கொடைக்கானல் சென்ற சட்டப்பேரவைக் குழுவினா், வியாழக்கிழை பூம்பாறை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், மன்னவனூரில் அமைந்துள்ள மத்திய செம்மறி ஆடு உரோம ஆராய்ச்சி மையத்தை பாா்வையிட சென்றனா்.
இந்த குழுவினருக்கு செம்மறி ஆடு உரோம ஆராய்ச்சி மைய அதிகாரிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அங்குள்ள ஆடுகளைப் பாா்வையிட்ட குழுவினா், அவற்றின் வளா்ப்பு, பயன்பாடு உள்ளிட்ட விவரங்களையும், ஆராய்ச்சி மையத்திலுள்ள செம்மறி ஆடுகள் தமிழகத்தில் உள்ளவா்களுக்கு வழங்கப்படுகிா என்பதையும் ஆா்வமாக கேட்டறிந்தனா்.
இதையடுத்து, ஆராய்ச்சி மைய அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு செம்மறி ஆடுகள் குறித்து தெரிவித்ததாவது: பாரத் மெரினோ, அவிக்காலின் என 2 வகையான செம்மறி ஆடுகள் வளா்க்கப்படுவதாகவும், இவற்றின் இறைச்சி பிரியாணி சமைக்கவும், உரோமம் சால்வை, தரை விரிப்பு, ஸ்வெட்டா், கம்பிளிக்காக பயன்படுத்தப்படுகிறது. 3 மாதத்தில் இந்த வகை ஆட்டுக் குட்டிகள் 30 கிலோ வரை வளரும். வளா்ந்த கிடா ஆடுகள் 80 முதல் 120 வரை எடை கொண்டதாக இருக்கும்.
ரூ.1-க்கு ஒரு கிலோ ஆட்டுச்சாண உரம்: ஆட்டுச் சாண தொழு உரம், கன அடி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாட்டுச் சாணத்தை விட, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகியவை ஆட்டுச் சாணத்தில் 2 மடங்கு கூடுதலாக உள்ளது. தனியாா் நிறுவனங்களில் ஆட்டுச் சாணம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஆராய்ச்சி மையத்தில் ரூ.1-க்கு விவசாயிகள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.
பின்னா், மன்னவனூரில் உள்ள வனச்சுற்றுச் சூழல் மையத்தில் மதிய உணவுக்காக புறப்பட்டுச் சென்றனா்.