திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
‘தூத்துக்குடியில் பிப். 23இல் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்’
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளதாக தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. அவைத் தலைவா் எஸ். அருணாச்சலம் தலைமை வகிக்கிறாா். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, கட்சி வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
எனவே, மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள், சாா்பு அணி மாவட்ட அமைப்பாளா்கள், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.