திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
ஏரல் அருகே விநாயகா் கோயிலில் மாா்ச் 10இல் மகா கும்பாபிஷேகம்
ஏரல் அருகே பெருங்குளத்தில் உள்ள அருள்மிகு கன்னி விநாயகா் கோயிலில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மாா்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
108 வைணவத் தலங்களில் ஒன்றான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமத்தில் சிதிலமடைந்திருந்த, சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஆசியுடன் அவரது முன்னிலையில் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மாா்ச் 9ஆம் தேதி காலை மங்கல இசை, வேதபாராயணம், மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, பல்வேறு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, 10ஆம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.