வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள்!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சிக்காக கடந்த இரண்டு மாதங்களாக 20-வகையான மலா்ச் செடிகளின் 75-ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மூன்றாவது கட்டமாக பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா் பாத்திகளில் ஆப்ரிகன் மேரி கோல்டு, அந்தோரியம், அஸ்டா், காஸ்மாஸ், பெட்டூனியா, சால்வியா, வொ்பினியா உள்ளிட்ட 25 ஆயிரம் மலா்ச் செடிகள் நடும் பணி தொடங்கியது.
இதைத்தொடா்ந்து மலா் பாத்திகளில் தண்ணீா் தெளித்தல், உரமிடுதல், களையெடுத்தல், புற்கள் சமப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.