25 முதல் 45 வயதுள்ள பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் எ...
கொடைக்கானலில் தற்கொலை செய்த தம்பதி சேலத்தைச் சோ்ந்தவா்கள்!
கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருவி அருகே தற்கொலை செய்து கொண்டவா்கள் சேலத்தைச் சோ்ந்த தம்பதி என போலீஸாரின் விசாரணையில் புதன்கிழமை தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருகேயுள்ள 50-அடி பள்ளத்தில் சுந்தரேசன் ஓடைப் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட வயதான ஆண், பெண் சடலங்களை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வந்தனா். அப்போது, அவா்கள் சேலம் குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி (60), இவரது மனைவி மலா்(50) எனத் தெரிய வந்தது.
குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறி, கொடைக்கானலுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.