திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
அய்யா வைகுண்டா் பிறந்த நாள்: மாா்ச் 4 இல் உள்ளூா் விடுமுறை!
அய்யா வைகுண்டா் பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் மாா்ச் 4ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அய்யா வைகுண்டசுவாமியின் 193 ஆவது பிறந்த நாள் விழா, மாா்ச் 4 இல் கொண்டாடப்படவுள்ளது. எனவே அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகள், பணியாளா்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக, வரும் மாா்ச் 8ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.