பணிநீக்க நடவடிக்கையில் துரிதம் காட்டும் அமெரிக்க அரசு!
அமெரிக்காவில் பணிநீக்க நடவடிக்கையிலும் அமெரிக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவில், குறிப்பாக உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம் மற்றும் சுகாதாரம், மனித சேவைகள் ஆகிய துறைகளில்தான் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறுகின்றனர். எரிசக்தி துறையில் 1,200 முதல் 2,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அணு ஆயுதக் குழுவை நிர்வகிக்கும் மற்றும் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திலிருந்து 325 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும் செயல்திறன் மேம்பாட்டுத் துறையை (DOGE) அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்தார். இந்தத் துறையின் தலைவராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க:வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை: ராகுல்
அரசு மேற்கொள்ளும் செலவுகளைக் குறைத்தாலே, செயல்திறன் அதிகரிக்கும் என்ற நோக்கில் இந்தத் துறை கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அதிகளவிலான அரசு ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும்வகையில் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தாமாக முன்வந்து ராஜிநாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாத ஊதியம் வழங்குவதாக டிரம்ப் அறிவித்தாலும், இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
இந்த பணிநீக்க நடவடிக்கை அமெரிக்காவின் 36 டிரில்லியன் டாலர் கடன் மற்றும் கடந்தாண்டு 1.8 டிரில்லியன் டாலர் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தேவைப்படும் நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை ஆதரவு தெரிவித்துள்ளது.