காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.
அந்த மாகாணத்தின் கோமா நகரை கடந்த மாதம் 27-ஆம் தேதி கைப்பற்றிய எம்23 கிளா்ச்சியாளா்கள், கவுமு நகரையும் கைப்பற்றுவதற்காக நகரின் தெற்குப் பகுதியில் அரசுப் படையினரு தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் 120-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.