செய்திகள் :

முதல்வருக்குதான் டப்பிங் தேவை; எங்களுக்கு இல்லை: அண்ணாமலை

post image

முதல்வருக்குத்தான் டப்பிங் தேவை, எங்களுக்கு தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"அமெரிக்காவை பொருத்தவரை டிரம்ப் ஒரு விஷயத்தை சொல்லி மக்களின் ஆதரவைப் பெற்று, அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை வந்திருக்கிறார். இன்று அமெரிக்காவில் மட்டுமே 29 லட்சம் இந்தியர்கள் அங்கு இருக்கிறார்கள். அதேவேளையில் அமெரிக்க அரசு தெரிவிக்கிற கருத்துப்படி, 7,50,000 பேர் அகதிகள் இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

குறிப்பாக ஜனவரி 19 ஆம் தேதிக்கு முன்னர் மெக்சிகோ பார்டரில் இருந்து நிறைய பேர் அமெரிக்காவிற்குள் புகுந்திருக்கிறார்கள். அமிர்தசரஸ் வந்த முதல் விமானத்தில் பார்த்தோமானால், நம்முடைய இந்தியர்கள் அந்த ஒரு குறுகிய காலத்தில் அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சித்தவர்கள். அவர்கள் அனைவரும் அங்கு தற்காலிக முகாமில் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் காப்பக முகாம்களில் இருந்து அவர்கள் நேரடியாக இங்கு அழைத்துவரப்பட்டார்கள்.

இன்று இரண்டாவது முறையாக விமானம் இந்தியர்களை அழைத்து வந்திருக்கிறது. அதைத்தான் நேற்று மோடி, டிரம்பிடம் பேசும்போது தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டார், நானும் டிரம்பும் இணைந்து, உலகளாவிய மனித கடத்தல் நெட்வொர்க்கை தகர்த்தெறிந்து விடுவோம் என்று கூறினார்.

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இது அமெரிக்க அரசு எடுக்கும் முடிவு. அதற்கு அனைத்து நாடுகளுமே கட்டுப்படுகிறார்கள். மெக்சிகோ நாடுகூட 80,000 ஏஜெண்டுகளை பார்டரில் அமர்த்தியிருக்கிறார்கள். இல்லையென்றால் 25 சதவீதம் வரிவிதித்து விடுவோம் என அமெரிக்கா கூறியது.

ஆனால், இதில் இந்திய அரசு, ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறும்போது, மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவிற்குள் வரக்கூடிய அனைவருக்கும் அரசு என்ன உதவி செய்யமுடியுமோ, அதை நிச்சயமாக செய்து கொடுக்கும்.

அதேபோல சட்டவிரோத வழியைப் பயன்படுத்தி முறைகேடாக, மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, விரையம் செய்து அமெரிக்கா சென்று யாரும் மாட்டிக்கொள்ளக் கூடாது. இன்று விமானத்தில் வரக்கூடியவர்கள் அனைவரும் டிரம்ப் பதவி ஏற்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றுவிட வேண்டும் என சென்று, காப்பகங்களில் இருந்து இன்று திரும்பி வருகிறார்கள்" என்றார்.

இதையும் படிக்க | பொரித்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? எண்ணெய் பற்றிய கவனம் தேவை!

தமிழக முதல்வர் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனக் கூறுகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,

"முதல்வர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், பட்ஜெட்டை பொருத்தவரை நேரடி நிதிப் பகிர்வு மூலமாக நிதி வந்து விடுகிறது. தமிழகத்தை பொருத்தவரை கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களுமே மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிற திட்டங்கள். முதியோர் உதவித்தொகை, ஏழைகளுக்கான வீட்டு திட்டம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி போன்ற பல்வேறு திட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மோடியின் அரசு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம் , நிதிப் பகிர்வு அடிப்படையில் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் மூன்றரை மடங்கு உயர்ந்திருக்கிறது.

46,000 கோடி ரூபாய் இன்றைய தினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வேலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. சுகமான நிலையம் துறைமுகத்திலிருந்து அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது, இப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் முதலமைச்சர். தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் வரவில்லை என்று கூறுகிறார். எல்லா ஆண்டுகளிலும் எல்லா மாநிலத்திற்கும் சிறப்புத் திட்டங்கள் வராது.

2021-2022ல் மிகப்பெரிய அளவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி, ஒரே ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. போன வருடம் ஆந்திரத்துக்கும் இந்த வருடம் பிகாருக்கும் கொடுத்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நிதி அமைச்சரிடம் சொல்லி வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது, பாஜக ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது, அதேபோல அவர்களுடன் மேடை போட்டு விவாதிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. ஆர்.எஸ். பாரதி மேடை போட்டு விவாதிப்பதற்குத் தயார் என்று கூறினார். அதற்கு நாங்களும் தயார்தான் மாநில அரசின் பட்ஜெட்டை நீங்கள் பேசுங்கள்.

மத்திய அரசின் பட்ஜெட்டை நாங்கள் பேசுகிறோம், உங்களிடம் டேட்டா இருந்தால் வெள்ளை அறிக்கை கொண்டு வாருங்கள். எங்களுடைய டேட்டாவை நாங்கள் கொண்டு வருகிறோம். யார் தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் முதலமைச்சர் எதன் அடிப்படையில் தொடர்ந்து பட்ஜெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை .

மேலும், முதலமைச்சருக்குத்தான் இன்றைய தினங்களில் டப்பிங் தேவைப்படுகிறது. அவருடைய குரலாக அறிவாலயத்திலிருந்து பல பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சருக்குத் தான் டப்பிங் தேவைப்படுகிறது, பாரதிய ஜனதா கட்சிக்கு எங்கும் டப்பிங் தேவைப்படுவது இல்லை.

பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றால் அவருக்கு எல்லா இடங்களிலும் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கிறது. அங்கிருக்கும் டிரம்ப் கூறுகிறார், என்னைவிட ஒரு சிறந்த வர்த்தக பேச்சுவார்த்தையாளர் மோடி என்று கூறுகிறார். இதையெல்லாம் ஸ்டாலின், டிவியை ஆன் செய்து கொஞ்சம் வால்யூம் வைத்து கேட்க வேண்டும். உலக அளவில் இந்தியாவின் அங்கீகாரம் என்ன, மோடிக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் என்ன என்பதை அவர் பார்க்க வேண்டும்.

27 ஆண்டுகள் கழித்து தில்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்திருக்கிறது, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வலிமை அடைந்து விட்டது என்று பேசுகிறார் தமிழ்நாட்டின் முதல்வர், அதன் பிறகு ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி போன்ற இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். முதல்வர் மறந்துவிடக்கூடாது, நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு சதவீதம் வாக்குகளை இழந்திருக்கிறார். 2026 இல் 20% வாக்குகளை இழந்து கீழே வந்திருப்பார்கள். அதனால் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் அவரின் பையனுக்கு தேவைப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு டப்பிங் செய்வதற்கு சந்தானம் தேவைப்படுகிறார். முதலமைச்சருக்கு டப்பிங் செய்வதற்கு பல அமைச்சர்கள் அதுவும் அதிமுகவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

தோப்பு வெங்கடாஜலத்திற்கு ஒரு பதவி , இவருக்கு பதவி அவருக்கு பதவி என இறக்குமதி செய்யப்பட்டவர்களுக்கு பதவி கொடுத்து கொண்டு இருக்கிறார். காரணம் திமுகவில் சக்தி இல்லை என்பதை முதலமைச்சரே ஒத்துக்கொள்கிறார். 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள். அதனால் டப்பிங் எங்களுக்கு தேவைப்படவில்லை அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள்தான் முதலமைச்சருக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.

தொடர்ந்து 'சிஏஜி தணிக்கைக்கு இந்து அறநிலைத்துறையினர், ஆவணம் சமர்ப்பிப்பதே இல்லை. அவர்களுக்கே தெரியும், அங்கு அவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது. பசுவைக் கொடுத்தால் அங்கு பசுவை காணவில்லை, கோவிலில் இருக்கும் தங்கத்தின் கணக்கு தெரியாது, பதினாறு சதவீதம் வருமானத்தை எடுப்பதற்கு அதிகாரம் இந்து அறநிலையத் துறைக்கு இருக்கிறது. எவ்வளவு பணத்தை எடுத்தார்கள் எங்கு எடுத்தார்கள் என்ற கணக்கு யாருக்குமே தெரியாது. ஒரு கோயில் கொடுக்கும் பணத்திற்கும் கோயிலுக்கு செலவு செய்யப்படும் பணத்திற்கும் எந்தவிதமான கணக்கும் இல்லை. மருதமலை கோயிலில் தைப்பூசத்தன்று, எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்று பார்த்தோம். தமிழகத்தில் ஒரு உதவாதத்துறை இருக்கிறது என்றால், மக்களுக்கு உபத்திரவம் கொடுக்கக்கூடிய ஒரு துறை இருக்கிறது என்றால், அது இந்து அறநிலையத்துறைதான். இதைப் பேசினால் அந்த அமைச்சர் ஒரு வேஷ்டியை கட்டிக்கொண்டு வந்துவிடுவார், தைரியம் இருந்தால் அதை சிஏஜி தணிக்கைக்கு விடுங்கள். நாம் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை அறநிலைத்துறையை அகற்றுவதுதான்' என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், "முதலமைச்சரினால் ஒரு ஏர் ஷோ ஒழுங்காக நடத்த முடியவில்லை, இவரெல்லாம் மணிப்பூர் அரசியல் பற்றி பேசுகிறார். சென்னையின் மையப் பகுதியில் நடைபெற்ற ஏர் ஷோ, எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும், இவர் பெங்களூரில் நடக்கும் ஏர் ஷோவை சென்று பார்த்து வரவேண்டும். இவருக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. அங்கு பாரதிய ஜனதா கட்சியின் குற்றம் என்ன? உயர்நீதிமன்றம் அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. அதனால் தமிழக முதல்வர் அவரின் வேலையை சரியாக செய்யாமல், இந்தியாவில், கும்பமேளாவில், அது நடக்கிறது இது நடக்கிறது என குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். உள்ளூரில் சொந்த ஊரில் சொந்த மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை ஏன் அவர் பேசுவதில்லை என்று கூறினார்.

நேற்று ஏடிஜி சட்டம்-ஒழுங்கு குறித்து, சுற்றறிக்கை வெளியிட்டு இருக்கிறார், குழந்தைகள் மற்றும்பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்திருப்பதாக அவர் ஒப்புக்கொள்கிறார்.. ஆனால் முதல்வர் இதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார். நான்கு வருடம் தூங்கிவிட்டு தேர்தல் வருகிறது என்பதற்காக, சீனியர் ஆபிஸர் வீட்டில் இருக்கும் பெண் காவலரை தற்போது ஸ்டேஷனுக்கு அனுப்புங்கள் என்று கூறுகிறார். சிறப்பு நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை.

அண்ணா பல்கலைக்கழக பெண் பாலியல் வன்கொடுமை குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. தமிழக முதல்வர் பகல் கனவில் இருக்கிறார். அவர் வீட்டில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை தாண்டி வெளியில் இருக்கும் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதுதான் உண்மை" என்றார்.

அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

வடசென்னையில் உள்ள இரு அனல் மின் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, தமிழக மின்வாரிய நிறுவனத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழு சனிக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்... மேலும் பார்க்க

மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்: இபிஎஸ்

விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மயிலாடுதுற... மேலும் பார்க்க

ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாதுரை பேசிய உரையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வா... மேலும் பார்க்க

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித... மேலும் பார்க்க

தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு!

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!

புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், ... மேலும் பார்க்க