Elon Musk: அதிபர் மாளிகையில் குதித்து விளையாடும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்; அரசை அவமதிக்கும் செயலா?
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் உலக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.
உலகப் பணக்காரரும், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்க அரசியின் 'DODGE' துறையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று (பிப் 14) பிரதமர் மோடி, எலான் இருவரும் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/buosshc1/New-Project-2.jpg)
அமெரிக்க அதிபர் மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது எலான் மஸ்க்கின் குழந்தைகளும் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளிடம் பரிசைப் பெறுவதும், அரசின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் அலுவலகத்தில் எலானின் குழந்தைகள் விளையாடுவதும் போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பலரும் க்யூட் என்று வரவேற்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தாலும், ஒரு சிலர் முக்கியத் தலைவர்கள் பங்குபெறும் சந்திப்பில் அதிபர் அலுவலகத்தில் இப்படி குழந்தைகளை விளையாட விடுவது தவறு என்றும், இது அரசை அவமதிக்கும் செயல் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 'உலகப் பணக்காரர்களில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்க்கின், பணக்கார திமிர் இது' என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மற்றொரு புறம், 'எலான் இந்த அரசின் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, அவரின் அலுவலகங்களில் அடிக்கடி தனது குழந்தைகளை அழைத்து வரும் பழக்கம் கொண்டவர். பல அரசியல் தலைவர்கள் தங்கள் குழந்தைகளை, நாய்களை அரசு அலுவலகத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம்தான்' என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
எலான் மஸ்கின் இந்தச் செயல் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் தெரிவிக்கவும்.