பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
Corruption: உலகின் டாப் 100 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?
உலகின் ஊழல் நிறைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பால் 2024-ம் ஆண்டுக்கான `2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் இந்தியா 96-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டு இருந்த இடத்தில் இருந்து 3 இடங்கள் பின் தங்கியிருக்கிறது. இந்தியாவுக்கு நிகரான ஊழல் குறியீட்டைக் கொண்ட நாடுகளாக காம்பியா மற்றும் மாலத்தீவு நாடுகள் உள்ளன.
CPI உலகளவில் பொதுத்துறை ஊழல்களை கணக்கெடுத்து வருகின்றது. ஊழல் கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் 0 முதல் 100 வரை புள்ளிகளை வழங்குகிறது. 0 என்றால் அதிகபட்ச ஊழல் நடக்கிறது. 100 என்றால் சுத்தமாக ஊழல் இல்லை.
இந்த ஆண்டு இந்தியா 38 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 39 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு 40 புள்ளிகளில் இருந்துள்ளது. இது இந்தியாவில் ஊழல் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
இந்தியாவின் அண்டை நாடுகள் ஊழல் அட்டவணையில், இந்தியாவை விட சிறந்த இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் 135, இலங்கை 121. ஆனால் சீனா இந்தியாவை விட அதிக ஊழல் நிறைந்த நாடாக 76-வது இடத்தில் உள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/g4ei0xak/cpi.png)
உலகளவில் மிகவும் குறைவான ஊழல் உள்ள நாடாக டென்மார்க் திகழ்கிறது. அது 90 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து ஃபின்லாந்து 88, சிங்கப்பூர் 84, நியூ சிலாந்து 83.
அதிக ஊழல் நடந்த நாடாக தெற்கு சூடான் வெறும் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தொடன்று சோமாலியா 9, வெனிசுலா 10, சிரியா 12 நாடுகள் உள்ளன.