பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: ``குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' - DGP-யிடம் மனைவி மனு
சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் திடீரென இடைநீக்கம் செய்யப்படிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நடவடிக்கையானது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், டி.ஜி.பி அலுவலகத்தில் மகேஷ்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/k3io0xes/மகேஷ்குமார்-ஐபிஎஸ்.jpg)
இந்த நிலையில், தங்களின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில் தன் கணவர் மீது இத்தகைய புகார் அளிக்கப்பட்டிருப்பதாக மகேஷ்குமாரின் மனைவி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ்குமாரின் மனைவி மற்றும் அவர் தரப்பு, ``பொய்யான புகாரை அளித்திருக்கிறார்கள். நேற்று நள்ளிரவு சம்மன் வந்த சிறிது நேரத்தில் சஸ்பெண்ட் என்று ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. எங்களின் நியாயம் கேட்கப்படவில்லையோ என்று ஆதங்கமாக இருந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/z8flpwp8/___________________1.jpg)
அதனால், விசாகா கமிட்டி யாருக்கும் சாதகமாகவும், பாதகமாகவும் இல்லாமல், எது நியாயமோ அந்த நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே வேண்டுகோள். அதனால், நியாயமாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சாரிடம் மனு கொடுத்திருக்கிறோம். விசாகா கமிட்டியில் கேட்கும்போது ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும். எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நபர் புகாரளித்திருக்கிறார். நியாயமான தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கும்." என்று தெரிவித்தனர்.