பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார் கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்
முதியோர் தின கொண்டாட்டம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, துறைசார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள், பயனாளிகள் விவரம், குறைகள், தேவைகள் மற்றும் செயல்முறையில் இருக்கும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தொடர்ந்து பேராலி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன் முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கிரீடம் சூட்டியும் கௌரவித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/sjm6nhku/IMG-20250214-WA0005.jpg)
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, "தமிழக அரசு, குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கான திட்டங்களையும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் சமூக நலத்துறை மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கென சுமார் 36 அரசு குழந்தைகள் இல்லம், 147 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கும் விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டதன்படி, கடந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி, ஆற்றுப்படுத்துதல், விளையாட்டு, பயிற்சி, ஓவியம், இசை போன்ற கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது" என பேசினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/nfw2rp0y/IMG-20250214-WA0000.jpg)
பாலியல் குற்றங்கள்...
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், 'பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு அதிகரித்துள்ளோம். இதன் காரணமாக பள்ளிகளிலோ, வெளி இடங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதை தைரியமாக மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது." என்றார்.
மேலும் பேசுகையில், "பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் தெரியாமல் பல விஷயங்களையும் பேசி வருகிறார். அவர் பேசுவதையெல்லாம் திமுக பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை" என்றார்.