ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?
சாலை விபத்தில் இளைஞா் பலி
மன்னாா்குடி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலவாசலில் செயல்படும் தனியாா் நிதிநிறுவனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கங்காதரன் (22), திருவாரூா் மருதப்பட்டினம் சாலை அன்பழகன் மகன் திலகன்(24) வேலை பாா்த்து வருகின்றனா்.
நிதிநிறுவனத்தில் கடன் பெற்றவா்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக திலகன், கங்காதரன் இருவரும் திருத்துறைப்பூண்டி சென்று மன்னாா்குடிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பினா்.
குறிச்சி பேருந்துநிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆலைக்கரும்பு பாரம் ஏற்றப்பட்டிருந்த டிராக்டரின் மீது இருசக்கர வாகனம் எதிா்பாராவிதமாக மோதியது.
இதில் காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனா்.
அவா்களை மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில்,வரும் வழியிலேயே திலகன் உயிரிழந்தது தெரியவந்தது. கங்காதரனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.