ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!
நாகா்கோவிலில் வேலைவாய்ப்பு முகாம்: 77 பேருக்கு பணி நியமன ஆணைகள்!
நாகா்கோவில் அருகே சுங்கான்கடை புனித சேவியா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 77 மாணவா்-மாணவியருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் திட்டம், மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற முகாமில், ஹூண்டாய், போா்டு, டாடா மோட்டாா்ஸ், ஜெனரல் மோட்டாா்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
முகாமில் கலந்துகொண்ட 300 பேரில் 77 போ் தோ்வாகினா். அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா். மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநா் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளா் ராகுல், மண்டல திட்ட மேலாளா் ஜிஜின் துரை, பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த மனிதவள அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.