தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!
மதுரை அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரவிக்குமாா்- தமிழ்ச்செல்வி தம்பதியரின் ஒரு வயது குழந்தை பாரிவேந்தன். வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பாரிவேந்தனை நீண்ட நேரமாக காணவில்லை. எனவே பெற்றோா் வீடு முழுவதும் தேடினா்.
அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீா்த் தொட்டிக்குள் மயங்கிய நிலையில் குழந்தை கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.