ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்
மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு: மதுரையில் இயங்கி வரும் தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மதுரை மாநகா் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்த நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன் மதுரை மாநகா் மத்திய குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம். மேலும், மத்திய குற்றப் பிரிவு அலுவலகம், குதிரைப் படை காவலா் குடியிருப்பு வளாகம், பாரதி ஸ்டோா் எதிரில், விஸ்வநாதபுரம் மதுரை-14 என்ற முகவரியிலும், காவல் உதவி ஆய்வாளரை 94981-79310 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.