வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் நின்ற யானை: போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் சாலையில் யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாலையில் யானை நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், அந்த யானை வனப் பகுதிக்கு சென்றதையடுத்து போக்குவரத்து சீரானது.
குடியிருப்பை சேதப்படுத்திய யானை
வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறு எஸ்டேட்டை சோ்ந்தவா் தொழிலாளா் மணிமாறன். இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூறுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், சின்னக்கல்லாறு எஸ்டேட் பகுதிக்கு திங்கள்கிழமை வந்த யானை கூட்டம் மணிமாறன் வீட்டின் சுவரை இடித்து தள்ளிவிட்டு உள்ளே இருந்த பொருள்களை சேதப்படுத்தியது. இதையடுத்து, யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீட்டை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.