`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!
கோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க : தில்லி: 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?
கோவை காந்திபுரம் பகுதியில் ரூ. 3.68 கோடி மதிப்பில் ஆம்னி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. 35 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதிகள், பாலூட்டும் அறை, காத்திருப்போர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கட்டண கழிப்பிடம் மற்றும் 32 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அரசு கொறாடா ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட நகராட்சி பகுதிகளில் ரூ. 30.72 கோடி மதிப்பீட்டில் முடிவற்ற 15 புதிய திட்டப் பணிகள் திறப்பு மற்றும் ரூ. 271 கோடி மதிப்பீட்டில் 1,028 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.