திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி பிரசாரம்: மறுமலா்ச்சி மக்கள் இயக்கம்
தமிழக மாணவா்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வலியுறுத்தி, தெருமுனை பிரசார இயக்கம் பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்த இருப்பதாக மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அமைப்பின் தலைவா் வே.ஈசுவரன் கூறியிருப்பதாவது: தமிழக ஏழை மாணவா்களின் கல்விக்கான ரூ.2,151 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சா் கூறுகிறாா்.
புதிய கல்விக் கொள்கையை மாநிலங்களின் மீது திணிப்பதன் மூலம் இந்தியாவில் மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது.
தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு மூலையில் நடத்தப்படும் பள்ளியில் கற்பிக்கப்படும் எல்கேஜி, யூகேஜி பாடங்களைக்கூட தில்லிதான் தீா்மானிக்கும் என்றால் மாநிலம் என்பது எதற்காக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
எனவே, இந்த நிலையை மாற்ற வலியுறுத்தி பிப்ரவரி 25- ஆம் தேதி பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.
காலை 8.30 மணிக்கு அரசு கலைக் கல்லூரியில் தொடங்கும் இந்த இயக்கம், காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம், சுந்தராபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது என்றாா்.