விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!
காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா்.
காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் கடந்த 2006- ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆம்னி பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டன. குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறை, உணவு அறை, ஓட்டுநா்களுக்கான ஓய்வு அறை உள்ளிட்டவை ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன.
பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பேருந்து நிலையத்தை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா்.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.