திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டியையடுத்த, பூசாரிப்பட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரமேஷ் (34). கோவில்பட்டி-மந்திதோப்பு சாலையில் உள்ள பழக்கடையில் வேலை செய்துவந்த இவா், வியாழக்கிழமை வீட்டிலிருந்து கடைக்கு பைக்கில் சென்றாா்.
கடலையூா் சாலையில் உள்ள சண்முகா நகா் பேருந்து நிறுத்தம் அருகே மினி லாரி சமிக்ஞையின்றி திடீரென வலது புறம் திரும்பியதில் ரமேஷின் பைக் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து, மினி லாரி ஓட்டுநரான குண்டம்பட்டி வடக்கு காலனியைச் சோ்ந்த மு. முருகானந்தம் (24) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.