ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
ஐ.ஜி.அலுவலகத்தில் திராவிடா் தமிழா் கட்சி மனு
மானாமதுரை அருகே இளைஞரின் கையில் வெட்டிய நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தென் மண்டல காவல்துறை தலைவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாகத திராவிடா் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் விடுதலை வீரன் தலைமையில் புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடாவூா் கிராமத்தில் கடந்த 12-ஆம் தேதி, பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த அய்யாச்சாமியை (21) மூவா் வழிமறித்து அவரது கையில் வாலால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அய்யாச்சாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இவா் மீது தாக்குதலில் ஈடுபட்ட நபா்கள் தொடா்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்குவதோடு, அவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.