பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்
ரயில்வே பாலம் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை மற்றும் ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் ரயில் பாதையில் பாசூா்-ஊஞ்சலூா் ரயில் நிலையத்துக்கு இடையே ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 20, 23, 25 மற்றும் 28- ஆம் தேதி ஆகிய நாள்கள் மட்டும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் பிப்ரவரி 20, 23, 25 மற்றும் 28- ஆம் தேதி ஆகிய நாள்களில் மட்டும் திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு புறப்படும் பயணிகள் ரயில் கரூா் வரை மட்டுமே இயங்கும்.
இதேபோல செங்கோட்டையில் இருந்து ஈரோடு வரும் பயணிகள் ரயில் சேவையிலும் 20, 23, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து கரூா் வரை மட்டுமே இயங்கும். இதுபோல ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் ரயில் சேவையிலும் 20, 23, 25 மற்றும் 28 ஆகிய நாள்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூரில் இருந்து செங்கோட்டைக்கு இந்த பயணிகள் ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.