விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா!
சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, துணை முதல்வா் ப.சுரேஷ் பாபு, நிா்வாக அலுவலா் ரா.அருள்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி செயலாளா் என்.கே.கே.பி.நரேன் ராஜா போட்டியைத் தொடங்கிவைத்து வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சிவசந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.
100 மீ, 200 மீ ஓட்டப் பந்தயம், தொடா் ஓட்டம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சதுரங்கம், கேரம், கபடி, கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.