தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி!
பெருந்துறை அருகே தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பெருந்துறை அருகே உள்ள கருமான்டிசொல்லிபாளையம் பேரூராட்சி பாரதி நகரில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 5 குடிசைகள் வீடுகள் முழுவதுமாக எரிந்து சேதமாயின. இந்நிலையில், தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களை, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் சந்தித்து, உடைகள், உணவுப் பொருள்கள் உள்ளி நிவாரண பொருள்களை வியாழக்கிழமை வழங்கினாா்.
அப்போது, கருமான்டிசொல்லிபாளையம் நகரச் செயலாளா் பழனிசாமி, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளா் சக்திவேல், மாவட்ட பொருளாளா் மணி உள்ளிட்டோா் இருந்தனா்.
இதேபோல, ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளா் தோப்பு வெங்கடாசலம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வம் ஆகியோா் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினா்.