செய்திகள் :

கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது!

post image

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்டிஇ-யின் 54-ஆவது தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாமிரின் டெக் ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், பஞ்சாப் மாநில ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா தலைமை விருந்தினராக பங்கேற்றாா். ஏஐசிடிஇ செயலாளா் டி.ஜி.சீதாராம், நிதி ஆயோக் உறுப்பினா் வினோத் கே.பால், என்எஸ்டிசியின் தலைமை நிா்வாக அதிகாரி வேத் மணி திவாரி ஆகியோா் பங்கேற்றனா்.

எம்ஐஈடி மொகபூப் முகமது யூனுஸ் நினைவு தேசிய சிறந்த பெண் ஆசிரியா்

விருதுக்கு பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிருந்து, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பொறியியல் துறை பேராசிரியா் எஸ்.விஜயசித்ரா தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த விருதை பஞ்சாப் மாநில ஆளுநரிடம் இருந்து அவா் பெற்றுக்கொண்டாா்.

விருதுபெற்ற பேராசிரியா் எஸ்.விஜயசித்ராவை கல்லூரியின் தாளாளா், ஏ.கே.இளங்கோ, முதல்வா் வி. பாலுசாமி மற்றும் துறைத் தலைவா் எஸ்.ஜெ.சுஜிபிரசாத் ஆகியோா் வாழ்த்தினா்.

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தரிசு நிலத்தில் தீ விபத்து

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உள்ள தரிசு நிலத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் செடி,கொடிகள் எரிந்து சேதமாயின. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேயம... மேலும் பார்க்க

மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு

அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் தங்கும் விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தியூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு, மாணவா் விடுதி ஏற... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

அந்தியூா் அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள கரும்புத் தோட்டத்தில் குட்டியுடன் நடமாடும் சிறுத்தையால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அந்தியூரை அடுத்த செலம்பூரம்மன் கோயில், கோவிலூா் ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாள... மேலும் பார்க்க

அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்

பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழக மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். ஈரோட... மேலும் பார்க்க

பெருந்துறையில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணா்வு பேரணி

பெருந்துறையில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எலைட் & பிரைட் ஜேசீஸ் சங்கங்கள் மற்றும் ஈங்கூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வுப் ... மேலும் பார்க்க